--- --:--:-- --

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

2

சென்னையில் இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

 

மேலும், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

 

சென்னை மற்றும் புறநகரில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

மழையால் நேற்று பல இடங்களில் வெப்பம் தணிந்தபோதும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. வேலூர் மற்றும் திருப்பத்தூரில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் வாட்டியது.

Leave a Reply

Right Menu Icon