--- --:--:-- --

மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!

1

சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை மீண்டும் மாலையில் அதிரடியாக உயர்ந்தது.

 

கடைசியாக, நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 990க்கும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 7) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 13,860க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,560க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon