நிவாரண பணம் எப்போது? உதயநிதி பரபரப்பு
நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர் அரசியல் பேச விரும்பவில்லை எனவும் புகை குண்டு வீசியது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.





