ஊராட்சி மன்ற தலைவருக்கு வட்டியுடன் அபராதம் – மாவட்ட ஆட்சியர்
சட்டவிரோதமாக கிராவல் மண் பயன்படுத்திய ஊராட்சி மன்ற பெண் தலைவர் அபராத தொகை செலுத்த காலதாமதப்படுத்தியதால் அபராத தொகையுடன் 24 சதவீத வட்டியுடன் சேர்த்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமான் சேரியில் ஊராட்சி மன்ற தலைவராக ஜான்சி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைத்ததாக காவலர்களுக்கு புகார் வந்தது.
அதன் பெயரில் அப்போதே வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து கிராவல் மண் அனுமதியின்றி பயன்படுத்தியது உறுதிப்படுத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கு 12.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மூலம் அபராத தொகை அரசுக்கு செலுத்த இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டும் தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராவல் மண் முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி கோட்டாட்சியர் அபராத தொகையுடன் 24 சதவீத வட்டி அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.





