--- --:--:-- --

தமிழகத்தில் நடமாடும் நியாயவிலை கடை திட்டம் எப்போது துவக்கம்?

10

மிழகத்தில் நடமாடும் நியாயவிலை கடைகளில் திட்டம் விரைவில் தொடங்கப்படும் இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 3 ஆயிரத்து 500 இடங்களில் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 33 மாவட்டங்களில் உள்ள 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் இந்த நியாய விலை கடைகளை செயல்படுத்துவது என்பது பற்றிய விவரங்களை வருகிற 20-ஆம் தேதிக்குள் கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திற்கு மண்டல அதிகாரிகள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதற்காக 9 கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் நடமாடும் நியாயவிலை கடைகள் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் துவங்கி வைத்த இருப்பதாக தெரிவிக்கிறது.

Leave a Reply

Right Menu Icon