--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : ஒரே நாளில் 5835 பேருக்கு பாதிப்பு.. உயிரிழந்தோர் 119 பேர்..! சென்னையில் 989 பேருக்கு தொற்று!!

11.1

மிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து ஒரே மாதிரியாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 119 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பு ஒரே மாதிரியாக 6 ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு 120 க்கு கீழாக 118, 119 எனவு மே பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5871 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை சிறிது குறைந்துது 5835 ஆக பதிவாகியுள்ளது.

 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை , 3, 20,355 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 6-வது நாளாக இன்றும் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து 989 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 1,13,098 ஆக உயர்ந்துள்ளது. இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பாதிப்புக்கு ஆளானவர்களை விட குறைவாக 5146 என பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,6l,289 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றுக்கு 119 பேர் பலியான நிலையில், இன்றைய உயிரிழப்பும் 119 ஆகவே பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளதாக
தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் இன்றும் அதிகபட்சமாக 453,,, திருவள்ளூர் 390 , கடலூர் 259, கோவை 289, ராணிப்பேட்டை 254, தேனி 290, விருதுநகர் 219 என மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. உயிரிழப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, செங்கல்பட்டு, நெல்லை மாவட்டங்களில் இன்று மட்டும் தலா 7 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon