--- --:--:-- --

சபரிமலை மகர ஜோதி 2024 எப்போது?

4

கர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் .

 

குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் பொங்கல், 2ம் நாள் மாட்டுப் பொங்கல் 3ம் நாள் காணும் பொங்கல் என மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகர ஜோதி தெய்வீக நிகழ்வு என நம்பப்பட்ட நிலையில், அது கொச்சுபம்பா எனும் ஊர் அருகில் இருக்கும் பொன்னம்பலமேடு மலைப்பகுதியில் மனிதர்களால் ஏற்றப்படும் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு உறுதி அளித்துள்ளது குறிபிடத்தக்கது.

 

இந்நிலையில் 2023ஆம் ஆண்டின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இரவு நடை சாத்தப்பட்டது. மகரஜோதி பூஜைக்காக டிசம்பர் 30-ம் மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.

 

தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 40 நாட்களில் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.முக்கிய நிகழ்வான மண்டல பூஜை வழிபாடு புதன்கிழமை காலை நடைபெற்றது. கலசாபிஷேகம், களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், சுவாமிக்கு 450 பவுன் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மங்கல இசை முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.

 

இந்த சிறப்பு பூஜைக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் நடை சாத்தப்பட்டது.இதையடுத்து, மகரவிளக்கு பூஜைக்காக இம்மாதம் 30-ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. ஜன.15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

Right Menu Icon