புதிய வெப்சீரிசில் ரெபா மோனிகாவுடன் இணையும் நடிகர் கவின்..!
லிப்ட் படத்திற்குப் பின் புதிய வெப்சீரிசில் நடிகர் கவின் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்கள் மூலமும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமும் அனைவராலும் அறியப்பட்ட கவின் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவர் நடித்துள்ள திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் வெளியிட தயாராக உள்ளது. இதையடுத்து புதிய வெப்சீரிசில் நடிக்கவுள்ளார். இதில் கவிநூக்கு ஜோடியாக பிரபல பிகில் நடிகையான ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்.







