டிக் டாக் பிரபலத்திற்கு முகப்பூச்சால் நிகழ்ந்தது என்ன..?
அழகுக்காக மஞ்சள் கலந்த முகப்பூச்சு பயன்படுத்திய பெண்ணுக்கு முகம் மஞ்சள் நிறமாக மாறியதாக புகைப்படம் வைரலான நிலையில் அதனை மறுத்து அந்த பெண் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
முகத்தில் உள்ள வெடிப்பை போக்கவும் கோல்டன் நிறத்தில் முகம் பளிச்சென்று காட்சியளிக்கவும் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரபலமான பெண் மஞ்சள் தூளை கலந்து வீட்டிலேயே முகப்பூச்சு தயாரித்து தினந்தோறும் பயன்படுத்தியதாகவும் அதனால் அவரது முகம் மஞ்சள் நிறமாக மாறியதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. டிக் டாக் பிரபலம் தான் நன்றாக இருப்பதாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.







