--- --:--:-- --

கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விருது..!

3

கூழாங்கல் திரைப்படத்திற்கு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் கிடைத்தத விருது எதிர்பாராத ஒன்று என இயக்குனர் தெரிவித்துள்ளார். நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் இணைந்து இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

 

மதுவிற்கு அடிமையான அப்பாவோடு தன் தாயை மீண்டும் அழைத்துவர அப்பாவி மகன் பயணிப்பதே கூழாங்கல் திரைப்படம். படம் நெடுக மதுரை மாவட்டத்தில் அரிதாபட்டி கிராமத்தில் மென்மையான வாழ்வியலின் தவிப்பை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

 

வினோத் ராஜ் இயக்கத்தில் முதல் படத்தில் கூழாங்கல் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுக்காக கடந்த வாரம் திரையிடப்பட்டது.

 

நடுவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இது திரைப்பட விழாவில் உயரிய விருதான ரோட்டர்டேம் விருதையும் பெற்று இருக்கிறது. ஒரு தமிழ் திரைப்படம் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறை.

Leave a Reply

Right Menu Icon