--- --:--:-- --

மது போதையில் நண்பருக்கு நேர்ந்த கதி..!

2

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கல்லால் அடித்துக் கொலை செய்த சக நண்பரை போலீசார் கைது செய்தனர். ஊமக்கவுண்டபட்டியை சேர்ந்த சேட்டுவும், அவரது நண்பர் கிருபாகரனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

 

அப்போது போதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கிருபாகரன் அருகில் கிடந்த கல்லை எடுத்து பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon