--- --:--:-- --

வீட்டில் சடலமாகக் கிடந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்..!

1

ஹைதராபாத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதிஷா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பஞ்சாரா ஹில்ஸ் ஸ்டேஷன் ஸ்டூடியோவில் நடத்தி வந்தவர் பிரதிஷா தெலுங்கு சினிமாவில் பல நடிகர் நடிகைகளுக்கும், பாலிவுட்டில் சில நடிகர் நடிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

 

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

 

அவரது அறையில் இருந்த கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை கைப்பற்றிய போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon