--- --:--:-- --

சிம்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன..?

2

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

 

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் அதிரடி காட்டி வருகிறது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு ராம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கொரொனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிம்பு நலமாக உள்ளார் வீடு திரும்பி விட்டார் என சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் தெரிவித்துள்ளார். சிம்புவுக்கு வெறும் வைரஸ் காய்ச்சல் மட்டுமே கவலைப்பட வேண்டாம் எனவும் மகத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon