ஆத்தூர் பகுதியில் பெய்த மழையில் குடை பிடித்தபடி நடந்த திருமணங்கள்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணங்கள் ஆத்தூரில் உள்ள கோயிலில் நடைபெற்றது. கொட்டும் மழையில் குடை பிடித்தபடி திருமண கோலத்தில் வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.






