--- --:--:-- --

நக்சலைட் உள்ளிட்ட தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம் : அமித்ஷா

4

க்சலைட்டுகள் உள்ளிட்ட இடதுசாரி தீவிரவாத குழுக்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் இருந்து முழுமையாக அழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

தீவிரவாத குழுக்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஆய்வு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய உள்துறை அமைச்சர் நக்சலைட் தீவிரவாதிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

 

இடதுசாரி தீவிரவாத குழுக்களை இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேரோடு அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக தேசிய பலனாய்வு முகமையும் அமலாக்க துறையும் மாநில அரசு காவல்துறை அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

எனினும் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்டாலும் அவர்கள் வேறு மாநிலங்களில் தஞ்சம் புகாமல் இருப்பதை கண்காணிப்பது அவசியம் என்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon