--- --:--:-- --

ஒரிசா பாலு மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்..!

3

மிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர்களின் வரலாற்று தொடர்புகளை கடல் வழியே தேடி கண்டு வெளிப்படுத்தியதில் முனைப்புடன் செயலாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

தன்னலம் கருதாமல் தமிழ் நலன் காக்கும் அவரது உழைப்பும் ஆர்வமும் என்றும் மதிக்கப்படும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரிசா பாலுவை இழந்து வாழும் குடும்பத்தினர் நண்பர்கள் தமிழ் அன்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon