--- --:--:-- --

“மாற்றங்கள் கொண்டு வரும்போது எதிர்ப்புகள் வருகிறது” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

7018fffa-8b3c-43ad-b12b-9137734ba61d (1)

நாட்டில் மாற்றங்களை கொண்டு வரும் போதெல்லாம் எதிர்ப்புகள் எழுவதாக, எதிர்க் கட்சிகளை பிரதமர் மோடி சாடியுள்ளார்.

 

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசு பிடிவாதமாக இந்த சட்டத்தை நியாயப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி முதல் பாஜக மூத்த அமைச்சர்களும், இந்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும், எதிர்க்கட்சிகள் தான், திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாட்டில் மாற்றம் கொண்டு வர பாஜக அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. ஆனால் இதற்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

 

அத்துடன், 2014-ம் ஆண்டுக்கு முன் சரிவில் இருந்து பொருளாதாரத்தை நிலைபெறச் செய்திருக்கிறோம்.

 

நாட்டின் பொருளாதாரத்தை வேகப்படுத்தவும், நவீனமயமாக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி வருகிறோம். 5 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்ற அறிவிப்பு வெறும் கானல் நீர் அல்ல. அந்த இலக்கை அடைந்தே தீருவோம்.நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம். விவசாயிகள், தொழிலாளர்கள், கார்ப்பரேட்டுகள் ஆகியோருடைய குறைகளை கேட்கும் ஒரு அரசு இந்தியாவில் இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Right Menu Icon