உ.பி.யில் கைதான ரவுடி விகாஸ் துபேவை அழைத்து சென்ற கார் விபத்தா? எண்கவுண்டரில் சுட்டுக்கொலையா?
உத்திரபிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக் கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் நேற்று அவர் சரணடைந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கைது செய்து கான்பூர் அழைத்து வந்தபோது விபத்து நிகழ்த்துள்ளது.
விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மத்திய பிரதேச போலீசார் விகாஸ் துபேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் எடுத்து பின்னர் ஃபிரான்ஸிஸ் ரிமாண்ட் மூலமாக உத்திரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்து இருந்தார்கள்.
உத்திரபிரதேச போலீசார் அவரை அழைத்துக்கொண்டு உத்திர பிரதேச மாநிலத்திற்கு கான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்று வந்துள்ளனர். தற்போது பருவமழை காலம் என்பதால் அந்த பகுதியிலேயே மழை பெய்து கொண்டுள்ளது.
அப்போது போலீசார் மற்றும் விகாஸ் துபே சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென விபத்துக்குள்ளானதாகவும் அந்த விபத்தில் அந்த வாகனம் கவிழ்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியிலே விகாஸ் துபே மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் விகாஸ் துபே தப்பிக்க முயற்சித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
விகாஸ் துபே காயம் அடைந்து இருக்கிறார் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு சில தகவல்கள் அவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் கூறுகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் எங்கு என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார்? எப்படி வாகனம் விபத்துக்குள்ளானது? ஏன் தப்பிக்க முயற்சி செய்தார்? என்று பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன.
உத்தரபிரதேச போலீசார் அங்கு இருக்க கூடிய அந்த பகுதி முழுவதுமே சாலைகளை அடைத்து போலீசார் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். விகாஸ் துபே எந்த மருத்துவமனையில் இருக்கிறார்? அவருக்கு என்ன சிகிச்சை நடந்து கொண்டுள்ளது? அவரது உடல்நலம் குறித்த தகவல்கள் என்ன? என்பதெல்லாம் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தகவல்களை வெளியிடவில்லை.







