தவறான ஊசி போடப்பட்டதால் கூலி தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி மருத்துவரால் போடப்பட்ட தவறான ஊசியால் கூலித்தொழிலாளி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. பட்டாள பள்ளியை சேர்ந்த ராமன் என்பவர் காவேரிப்பட்டணம் அடுத்த மோரனகள்ளியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து இரண்டு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
அங்கு காய்ச்சல் பாதிப்புடன் சென்ற ஜெயவேல் என்பவருக்கு ராமன் கை நரம்பில் ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த ஜெய வேலை அவரது மனைவி காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராமனை கைது செய்து விசாரித்தபோது அவர் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




