--- --:--:-- --

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

download (2)

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாக்காளர்பட்டியல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் ஐந்தாம் தேதி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon