சின்னத்திரையில் சாதனை படைத்த விஜயின் பிகில்
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைகாட்சியில் சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் விஜய் படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவர் படம் தொடர்பான அறிவிப்புகளை அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி விஜய் படத்தின் டீஸர் அல்லது ட்ரெய்லர் வெளியானால் அதை உடனே அதே லைக் பெற வைத்து யூடியூப்பில் சாதனை படைக்க செல்கின்றனர்.
அந்த வரிசையில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் குவிந்ததால் அரங்கம் நிரம்பியது. அத்துடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அனுமதி சீட்டு இருந்தும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இறுதியில் போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர் அத்துடன் நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் விமர்சனங்கள் சர்ச்சையை கிளப்பின. இந்த நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஒளிபரப்பானது இதனை சுமார் 96 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.
இதன் மூலம் அதிக நபர்கள் கண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று சாதனையை இசை வெளியீட்டு விழா படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த சாதனையை விஜய் நடித்த சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வைத்திருந்தது. அதனை இப்போது மீண்டும் பிகில் விஜய் உடைத்து டிஆர்பி மன்னன் என்று ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.





