தன்னம்பிக்கை உரையாற்றும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவருக்கு விஐபி தன்னார்வலர் விருது..!
மதுரை அனுப்பானடியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மருத்துவம் மேலாண்மை துறையில் பட்டயப்படிப்பு பயின்று வருகிறார். ஒன்பதாம் வகுப்பு பயிலும் போதே குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை சந்தித்து ஆர்வத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஆக திகழ்கிறார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரையாற்றியிருக்கிறார். மது மற்றும் புகைப் பழக்கங்களுக்கு அடிமையானவரை தனது பேச்சாற்றல் மூலம் மனம் திறந்த செய்துள்ளார் .
இதை பாராட்டி ஐநாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு ஒன்று விஐபி தன்னார்வலர் என்ற விருதை வழங்கியுள்ளது. இளம் வயதில் சமூக அக்கறையுடன் குறைந்த நாட்களில் அதிக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.






