--- --:--:-- --

8 மாத கர்ப்பிணி மின்சாரம் தாக்கி பலி..!

2

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட 8 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். பரமநந்தல் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணியான சுஜாதா மின்மோட்டாருக்கான சுவிட்சை ஆன் செய்துள்ளார்.

 

மழை பெய்து ஈரத்தில் மின்கசிவு ஏற்பட்டு இருந்ததால் எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. சுஜாதாவை காப்பாற்ற முயன்ற அவரது தந்தை, தாய்க்கும் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

 

இதனையடுத்து 3 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் கர்ப்பிணி சுஜாதா செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். நாளை வளைகாப்பு நடைபெறவிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon