வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிக்கு வன்கொடுமை..!
சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த சிறுமி வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த எட்டாம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
நந்தம்பாக்கத்தில் நின்றிருந்த சிறுமியிடம் கடலூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பாக்யராஜ் சவாரி வேண்டுமா என கேட்டு சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நண்பர் பரமசிவன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பரமசிவன் வேலை இல்லை என கூறியதால் மீண்டும் சென்னைக்கு வந்து சிறுமி பாக்யராஜ் சந்தித்த பொழுது காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சமையல்காரர்கள் பாபு, கருணாநிதி ஆகியோரிடம் பாக்யராஜ் சிறுமியை அனுப்பி வைத்திருக்கிறார். அப்பொழுது பாபு என்பவர் சிறுமியின் உறவினரை தொடர்பு கொண்டதால் காவல்துறை உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டார்.
சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் பாக்யராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





