திருச்சி கிழக்கில் இன்று விஜய் தேர்தல் பிரச்சாரம்
தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், கடந்த மார்ச் 30-ந் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய், பிற்பகலில் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் யாரும் தனது வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





