--- --:--:-- --

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி உயிரிழப்பு..!

1

டிகர் அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித் குமார். எந்தவித திரை பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நடிக்க வந்து இன்று பல கோடி ரசிகர்களை வென்றிருக்கிறார் அஜித். பல திரைப்படங்களில் நடித்துள்ள அஜித், அண்மைக்காலமாக கார் ரேஸிங் மீது தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறார். இனி அவர் படங்களில் நடிப்பது பற்றி சமீபமாக இணையதளங்களில் விவாதம் எழுந்து வருகிறது.

 

இந்த நிலையில் அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84. 2 ஆண்டுகளுக்கு முன்புதான் அஜித்தின் தந்தை சுப்பிரமணி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்த அஜித்தின் குடும்பத்தினர் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

 

 

இந்த சூழலில்தான் அஜித்தின் தாயார் மோகினி உயிரிழந்திருக்கிறார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக அஜித் துபாயில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகின. அஜித் துபாயில் இருந்த வேளையில் அவரது தாயார் மோகினி உயிர் பிரிந்திருக்கிறது.

 

 

சென்னை தனியார் மருத்துவமனையில் வைத்து அஜித் தாயார் மோகினி உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து அஜித் துபாயில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மோகினியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon