பணம் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது..!
சென்னை பெருங்களத்தூரில் மளிகை கடை பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அருணகிரிநாதர் தெருவில் மல்லிகை கடையுடன் பட்டாசு விற்பனை செய்து வந்த பார்வதியின் கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி அவரிடம் அனுமதி இன்றி பட்டாசு விற்பது குறித்து கேட்டதோடு 40 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
பார்வதியின் புகாரை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த பீர்க்கன்காரணை போலீசார் குண்டு மேடு பகுதியை சேர்ந்த செந்தில் குமாரை கைது செய்துள்ளனர்.






