எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் உற்சாக நடனமாடிய வீடியோ வைரல்..!
எல்லைப் பகுதியான லடாக் அருகே இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்தியா-சீனா இடையே கடந்தாண்டு லடாக் பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பு வீரர்களும் பின்வாங்கினர்.
இந்த நிலையில் பதற்றம் நிறைந்த பகுதியான தங்க்ஷாவு என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நடனம் ஆடியுள்ளனர். இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண் வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.







