கட்சியில் இருந்து விலகிய நபரிடம் மீண்டும் திரும்பி வருமாறு கூறிய மம்தா..!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நபரிடம் மீண்டும் திரும்பி வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி தனது வெற்றிக்கு பாஜகவின் உதவியை நாடுவதாக கூறப்படுகிறது. அவருடன் பேசிய மம்தா பானர்ஜி கட்சிக்கு திரும்ப வருமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக அந்த ஆடியோ வெளியாகியுள்ளது.
அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக விமர்சித்துள்ளது. ஆனால் ஒரு முன்னாள் கட்சி தலைவருடன் பேசியதில் தவறு ஏதுமில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.






