தற்கொலைக்கு கணவரும், மாமியாரும் தான் காரணம் என வீடியோ வெளியிட்ட வைரல்..!
சென்னையில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தனது மரணத்திற்கு தனது கணவரும் மாமியாரும் தான் காரணம் என வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை ஜாபர் கான் பேட்டையை சேர்ந்த ஜோதி ஸ்ரீ என்பவருக்கும் திருமுல்லைவாயிலை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் ஜோதிஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது மரணத்திற்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு முன் வீடியோவும் பதிவு செய்துள்ளார். அதில் தனது மரணத்திற்கு தனது கணவரும் மாமியாரும் தான் காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.






