கோவை சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி கருத்து..!
கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை துடியலூர் அருகே தனிப்படை போலீஸ் சுட்டுப்பிடித்தது. 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குனா, சதீஷ், கார்த்திக் ஆகிய மூவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். காலில் குண்டுபட்டு 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளனர்.
பிடிபட்ட மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்றும், இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க முயன்ற காவலர் சந்திரசேகருக்கு அரிவாள் வெட்டு விழுந்த்தில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவலர்கள் சுட்டுப் பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.





