நவம்பர் 1 முதல் தமிழ்நாட்டில் வாகன வரி அதிரடி உயர்வு..!
தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்வு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. போக்குவரத்து துறையின் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகள் உயர்த்தப்படாத நிலையில் அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்பட்டு சட்டப்பேரவையில் ஒப்புதல் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி வாகனங்களுக்கான வரி உயர்வு வருகிற 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவை பெற்றுள்ளது. சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு வரி உயர்ந்துள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் உள்ள புதிய பைக்குகளுக்கும் 10 சதவீதமும் அதற்கு மேல் 12 சதவீதமும் வாழ்நாள் வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





