திமுகவின் வெற்றியை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடந்து வருகிறது..!
திமுகவின் வெற்றியை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடந்து வருவதாகவும் வெற்றியை சுலபமாகப் பெற்றுவிட முடியாது என்றும் அந்த கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் இலக்கும் நோக்கும் 234 என்ற தலைப்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கொளத்தூர் தொகுதி திமுக பணியாளர்களுக்கு தேர்தல் பணி பொருட்களை வழங்கியுள்ளார். முன்னதாக உரையாற்றிய ஸ்டாலின் திமுக சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது என்று தொண்டர்களுக்கு எச்சரித்துள்ளார்.





