ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய வானதி..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கு என்று ஒவ்வொரு திட்டங்களை பார்த்து பார்த்து செய்தார் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். சென்னை சூளைமேட்டு நடைபெற்ற மகளிர் மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் மற்றும் கௌரவம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறது பாஜக எனவும் அவர் குறிப்பிட்டார்.





