கார் மோதியதில் 10ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. கிராம மக்கள் மறியல் போராட்டம்..!
அரியலூர் அருகே கார் மோதி 10ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில் சடலத்தோடு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரகிரி அருகே உள்ள ராயபுரம் காலணியைச் சேர்ந்த வாசு அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நண்பரோடு நேற்று மாலை கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்த கார் சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதியது. படுகாயம் அடைந்த வாசு உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரை அடித்து நொறுக்கினர்.
பின்னர் மாணவரின் சடலத்தோடு அருகில் ஒரு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். சாலையோரம் நடைபெற அருகே தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
விரைந்த காவல்துறையினர் மற்றும் அரியலூர் கோட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் செந்துறை அரியலூர் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





