கொரோனா அச்சம் காரணமாக முதல் முறையாக மூடப்பட்ட வைகை அணை
கொரொனா அச்சுறுத்தல் எதிரொலியாக வைகை அணை முதன்முறையாக மூடப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் காரணமாக அண்டை மாவட்ட எல்லையோர மாநிலங்களில் மக்கள் கூடும் இடங்களில் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை மூடப்பட்டுள்ளது 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணை 62 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது. இதனால் அணையின் வலது கரை இடதுகரை பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.






