தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் தடுப்பூசி போட திட்டம்..!
தமிழகத்தில் பெருந்தொற்று வைரஸ் தடுப்பூசி போடும் பணி ஐந்து மாவட்டங்களில் 11 இடங்களில் தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெருந்தொற்று வைரஸ் தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. இதையொட்டி தமிழகத்தில் தடுப்பூசி ஒத்திகை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களை விளக்கினார்.
அப்போது தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என கூறினார் . அதன்படி சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனை, பூந்தமல்லி ஐந்து இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரிவித்தனர்.
தடுப்பூசி போடும் பணியில் 21,000 செவிலியர்கள் ஈடுபட உள்ளனர் என்றும், இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார். மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள் காவல்துறையினர் உள்ளிட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.






