இன்று முதல் தடுப்பூசி முகாம்..!
வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் இன்று முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
15 வயதுகுட்பட்ட சிறார்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





