--- --:--:-- --

சுகாதாரமற்ற உணவகத்தின் உரிமம் ரத்து..!

5

சுகாதாரமற்ற வகையில் உணவகம் நடத்தினால் உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் ஆய்வகத்தின் அறிக்கையில் உண்ண தகுதி இல்லாத உணவு சுகாதாரமற்ற உணவு என முடிவு வரும் பட்சத்தில் அந்தந்த உணவகத்தின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் உணவு பாதுகாப்பு சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றியதற்கு அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் அந்த உணவகம் மீண்டும் திறக்கப்படும் எனவும் அதுவரை அந்த உணவகத்தை மூடும் படியும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

Right Menu Icon