கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி..!
கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கோவிட் சிகிச்சைக்குப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது. மர்க் மற்றும் பிரென்ச் பேக் பயோ தேரபீயூடிக் நிறுவனங்கள் இணைந்து கொரொனா சிகிச்சைக்கான மாத்திரையை தயாரிக்கின்றன.
மோல்விபிராவர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாத்திரை பரிசோதனைகளின் போது இறப்புகளையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் 50 சதவீதம் வரை குறைத்து இருப்பதாக தெரிகிறது.
இந்த மாத்திரைக்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. கொரொனா அறிகுறிகள் இருப்பவர்கள், தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் இந்த மாத்திரையை முதலில் ஐந்து நாட்களில் ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்று பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதாரத் துறை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்த மாத்திரையைப் பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். தடுப்பூசியைப் தயாரிப்பது எளிது என்பதால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






