இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை துவக்கி வைத்த உதயநிதி..!
இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் மனிதர்களே கழிவை அகற்றும் முறையை நிரந்தரமாக அழிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறை மாற்றப்பட்டு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதன் பின் தொடர்ச்சியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்எந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் பணியை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.







