டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள விராட் கோலி..!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபீனா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறையாக களமிறங்கினார்.
விராட் கோலி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது நாளான நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
இந்த 10 ஆண்டுகளில் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 61 போட்டிகளில் இந்தியாவிற்கு கேப்டனாக இருந்துள்ளார். மொத்தம் 7 ஆயிரத்து 534 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







