முதல்வர் வாகனத்தை படம் எடுக்க முயற்சித்த இரு இளைஞர்கள் ..!
முதல்வர் வாகனத்தை செல்போனில் படம் பிடிக்க முயன்ற இலங்கை வாலிபர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை காமராஜர் சாலையில் தமிழக முதல்வரின் வாகனம் வரும் வழியில் செல்போனில் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று செல்போனில் படம் எடுக்க முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து மெரினா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மன்னரையும் தனியார் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ள இருவரும் கடற்கரைக்கு வந்த பிறகு புகைப்படம் எடுப்பதற்காக நின்றதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த இருவரும் சென்னையை சுற்றி பார்க்க வந்ததும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





