--- --:--:-- --

அரசு ஊழியர்களுக்கு கிடைத்த சிறப்பு போனஸ் ..!

4

ரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஆக 3000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon