நாளை இரவு 9 மணி முதல் இரண்டு வார ஊரடங்கு அமல்..! முதல்வவரின் அதிரடி அறிவிப்பு..!
கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இருப்பினும் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை மையங்கள் போன்றவை காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதன்பிறகு கட்டுமான உற்பத்தி மற்றும் வேளாண் துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அவர் கூறியிருக்கிறார். பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் எடியூரப்பா அறிவித்துள்ளார்.






