ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் திறந்து ஆக்ஸிஜன் தயாரிக்க முடிவு..!
ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் திறந்து ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடியில் உள்ள ஆலையின் ஆக்சிசன் தயாரித்து இலவசமாக வழங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது நிலையில் தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் நிர்வாகத்தை ஏற்று ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட உச்ச நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும் இதனை ஏற்க மறுத்து விட்டது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதி, காங்கிரஸ் சார்பில் தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், மார்க்சிஸ்ட் சார்பில்
பாலகிருஷ்ணன் பாஜக சார்பில் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பழனிச்சாமி தற்போதுள்ள இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.






