--- --:--:-- --

விடுதியில் 440 மாணவர்களுக்கு இரண்டு கழிவறை..!

7

ர்மபுரியில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு கலை கல்லூரி விடுதியை பார்வையிட்ட தர்மபுரி எம்எல்ஏ தர்மபுரி அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதிஅதியமான் கோட்டை அருகே தனியார் வாடகை கட்டிடத்தில்இயங்கி வருகிறது.

 

இந்த விடுதியில் சுமார் 440 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு விடுதி காட்டப்பட்டு திறக்கப்படாமல் இருப்பதால் விடுகதை ஆரம்பிக்கப்பட்ட கட்டடத்திற்கு அரசு 65 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறது.

 

இந்த கட்டிடத்தில் போதுமான கழிப்பறை வசதி தூய்மையான குடிநீர் வசதி வேண்டி மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் கல்லூரி விடுதியை ஆய்வு செய்தார்.

 

440 மாணவர்களுக்கு இரண்டு கழிவறை மட்டுமே உள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது என்றும் இதனால் மாணவர்கள் கல்லூரி செல்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது என்றும் எம்எல்ஏ வெங்கடேசன் தெரிவித்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியின் கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon