பெருந் தொற்றால் பாதித்தவர்கள் வெளியே சென்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம்..!
பெருந் தொற்றால் பாதித்தவர்கள் வெளியே சென்றால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகரில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் இரண்டாவது முறையாக வெளியே வந்தால் கோவிட் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



