--- --:--:-- --

பொள்ளாச்சி அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது.ரூ.25 லட்சம் மதிப்புள்ள 55 1/2 சவரன் நகைகள்,ரூ.1.28 லட்சம் பணம் பறிமுதல் !!!

14

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பொருட்டு மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா,டி.ஐ.ஜி கார்த்திகேயன் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை எஸ்.பி.அருளரசு உத்தரவின் பேரில் பொள்ளாச்சி டி.எஸ்.பி.சிவக்குமார் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,எஸ்.ஐ.க்கள் கார்த்திகேயன்,மனோகரன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சியை அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே ஆனைமலையை சேர்ந்த நண்டுக்காரன் ( எ ) முகமது யாசின்,மாக்கினாம்பட்டியை சேர்ந்த பாண்டியன் உள்ளிட்ட இருவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டர்.

 

விசாரணையில் இருவரும் பொள்ளாச்சி,ஆனைமலை பகுதிகளில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும்,பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திடியதாகவும், வஞ்சியாபுரம் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களையும்,பாலக்காடு சாலை அன்பு நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பணமும்,கோட்டூர் கரியான் செட்டிபாளையத்தில. ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதையும் காவல் துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.

இருவரிடமிருந்தும் 55 1/2 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் ரூ.1.28 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

குறிப்பு : குற்றவாளிகளை கைது செய்து பொருட்கள் மற்றும் பணத்தை மீட்ட காவல் துறையினரை கோவை எஸ்.பி.அருளரசு பாராட்டி வெகுமதியினை வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon