--- --:--:-- --

கோவையில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததாக இருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.3 தோட்டாக்கள்,6 நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் !!!

24

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட செல்வபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் கட்டாஞ்சி மலை மற்றும் செல்வபுரம் பகுதிகளில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

அப்போது,செல்வபுரம் வடக்கு ஆலமர தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி,வடிவேல் இருவரும் சேர்ந்து இறந்த நிலையில் சிதைந்து கிடந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை சுற்றி வளைத்துப்பிடித்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்த நிலையில் சிதைந்து கிடந்த காட்டுப்பன்றியின் இறைச்சி வைத்திருந்ததும்,இரண்டு குடங்களில் கள்ளச்சாராய ஊறல்,3 தோட்டாக்கள் மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.இதனடிப்படையில் சட்டவிரோதமாக காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும்,கைது செய்யப்பட்ட இருவர்,பறிமுதல் செய்யப்பட்ட சாராய ஊறல்,3 தோட்டாக்கள் மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகளையும் மேல் நடவடிக்கைக்காக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon